அஹார் எனும் இந்த பிரசித்தமான தொல்லியல் ஸ்தலம் மேவார் மன்னர்களின் சமாதிக்கற்கள் காணப்படும் இடமாகும். இந்நகரம் உதய்பூரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது.
இந்த ஸ்தலத்தில் 19க்கு மேற்பட்ட மன்னர்கள் எரிக்கப்பட்ட அடையாளமாக சமாதிக்கற்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை தவிர்த்து இங்கு ஒரு தொல்பொருள்துறை அருங்காட்சியகமும் உள்ளது.
மஹாராணா அமர்சிங், மஹாராணா சங்க்ராம் சிங், ஸ்வரூப் சிங் மற்று ஷாம்பு சிங் ஆகியோரது சமாதிக்கற்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை தவிர ஃபதேஹ் சிங், பூபால் சிங், மேவார் பகவத் சிங் மற்றும் சஜ்ஜன் சிங் ஆகிய மேவார் மன்னர்களது சமாதி கற்கள் இங்கு உள்ளன.



Click it and Unblock the Notifications