பாகோர் கி ஹவேலி, உதய்பூர்

பாகோர் கி ஹவேலி எனும் கோட்டை மாளிகை பிச்சோலி ஏரிக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. புராதன அழகு கொண்ட இம்மாளிகை மேவார் ராஜ சபையின் பிரதான மந்திரியாகிய அமீர் சந்த் பத்வா’வால் கட்டப்பட்டுள்ளது.

நுட்பமான மரவேலைப்பாடுகள் மற்றும் கண்ணாடி அலங்காரங்கள் இந்த 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹவேலி மாளிகையின் சிறப்பம்சங்களாகும். பாகோர் மஹாராணா சக்தி சிங் இந்த ஹவேலியின் பிரதான கட்டமைப்புடன் மேலும் மூன்று அடுக்குகளை 1878ம் ஆண்டு கட்டியுள்ளார்.1986ம் ஆண்டில் இம்மாளிகை மேற்குப்பிராந்திய பண்பாட்டியல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனுள்ளே அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் மேவார் வம்சத்தின் ராஜ நாகரீகம், பண்பாடு மற்றும் பாரம்பரியம் போன்றவை சுவரோவியங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவை தவிர இங்கு பயணிகள் தாய விளையாட்டு பகடைகள், கைவிசிறிகள், ஆபரணப்பெட்டிகள் மற்றும் பீடா பெட்டிகள் போன்றவற்றை காணலாம். வண்ணக்கண்ணாடித் துண்டுகளால் உருவாக்கப்பட்ட மயில் வடிவங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள விசேஷ கலையம்ச படைப்புகளாகும்.இங்குள்ள ராணி அறையில் அசல் மேவார் ஓவியங்களை பயணிகள் பார்க்கலாம். இந்த மாளிகையின் உட்புறங்கள் அழகான நுட்பமான கண்ணாடி வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.

Please Wait while comments are loading...