Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உதய்பூர் » ஈர்க்கும் இடங்கள் » கிறிஸ்டல் காலரி

கிறிஸ்டல் காலரி, உதய்பூர்

62

ஸ்படிக காட்சிக்கூடம் என்பது ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனையின் ஒரு அங்கமாகும். இது 1994ம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. பிரபலமான ஓஸ்லர் படிகக் கலைப்பொருட்கள் 129 வருடங்கள் பழமையான இந்த காட்சிக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மஹாராணா சஜ்ஜன் சிங் பிரத்யேகமாக இங்கிலாந்திலிருந்து பிரபல படிகப்பொருள் தயாரிப்பாளர்களான எஃப் அன்ட் சி ஓஸ்லர் கம்பெனியாரிடமிருந்து 1877ம் ஆண்டு வரவழைத்துள்ளார்.இந்த காட்சிக்கூடத்தில் பயணிகள் அழகான ஸ்படிக ஆடைகள், நீர் ஜாடிகள், பீங்கான் பொருட்கள், கண்ணாடி மேஜைகள், சொகுசு இருக்கைகள், நகை வேலைப்பாடு கொண்ட விரிப்புகள், படுக்கைகள் மற்றும் சிங்காசனம் போன்ற நாற்காலிகள் போன்றவற்றைக்காணலாம்.

இவை தவிர வாசனைத்தைலம் மற்றும் தேன் பாட்டில்கள், மெழுகுவர்த்தி தாங்கிகள் மற்றும் கண்ணாடியால் ஆன கோப்பைத்தாங்கிகள் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.தர்பார் மண்டபத்தில் முகலாய பேரரசர் அக்பரை எதிர்த்த மஹாராணா பிரதாப் உள்ளிட்ட முன்னாள் உதய்பூர் அரசர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.இந்த காட்சிக்கூடத்தில் இன்றும் ராஜவம்சத்தினரின் திருமணங்களும் விழாக்களும் நடத்தப்படுகின்றன. தில்குஷ் மஹால் அல்லது சந்தோஷ மாளிகை எனும் மாளிகையும் கிறிஸ்டல் காலரிக்கு அருகில் உள்ளது.

இங்கு கலையம்சம் பொருந்திய ஓவியங்கள் மற்றும் பல வண்ணக்கற்கள் பொதித்த மயில் வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. மோதி மஹால் அல்லது முத்து மாளிகை எனப்படும் மாளிகையானது தக்கை மற்றும் கண்ணாடி சேர்த்து உருவாக்கப்பட்ட அலங்கார வேலைப்பாடுகளால் நிரம்பியுள்ளதுகிறிஸ்டல் கேலரிக்கு அருகிலுள்ள சினி மஹால் என்பது அலங்கார ஓடுகள் பதிக்கப்பட்ட மாளிகை ஆகும். கிருஷ்ண விலாஸ் எனும் மாளிகையில் பயணிகள் ராஜவம்ச விழாக்கள், ஊர்வலங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை குறிக்கும் குறு ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

இங்கு முன்னாள் மஹாராணாக்களின் உருவ ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. பாரி மஹால் அல்லது தோட்ட மாளிகை எனும் அரண்மனையும் கிறிஸ்டல் கேலரிக்கு அருகில் உள்ளது. இந்த வளாகம் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் மதியம் 3 மணியிலிருந்து 8 மணி வரையிலும் திறக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed