தில் குஷ் மஹால் எனும் மாளிகை சிட்டி பேலஸ் எனப்படும் நகர அரண்மனையின் ஒரு அங்கமாக உள்ளது. இது மஹாராணா கரண்சிங் அவர்களால் ராஜகுடும்பப் பெண்களுக்காக உருவாக்கப்பட்டதாகும்.
பிச்சோலா ஏரியை நோக்கியவாறு இருக்கும் நகர அரண்மனையின் இணைப்பாக இது பின்னாளில் கட்டப்பட்டுள்ளது. தில் குஷ் மஹாலின் உட்புறம் வெகு நுட்பமான கண்ணாடி வேலைப்பாடுகள் நிரம்பி காணப்படுகிறது. பலகணிகள் மற்றும் தோட்டங்கள் நிரம்பிய பெரிய மாளிகைகளில் இதுவும் ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications