Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உதய்பூர் » ஈர்க்கும் இடங்கள் » ஹல்டிகாட்டி

ஹல்டிகாட்டி, உதய்பூர்

62

உதய்பூரிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள ஹல்டிகாட்டி இங்கு நடந்த ஹல்டிகாட்டி யுத்த வரலாறு காரணமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்த ஹல்டிகாட்டி யுத்தமானது, மேவார் மஹாராணா பிரதாப் மற்றும் அம்பேர் வம்ச ராஜா மான் சிங் ஆகிய இருவருக்குமிடையே 1576ம் ஆண்டு நடைபெற்றது.

இந்த யுத்தத்தால் பெரும் உயிரிழப்பும் சேதமும் ஏற்பட்டது வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.இப்பிரதேசத்தின் மண் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதால் இப்பகுதிக்கு ஹல்டிகாட்டி எனும் பெயர் ஏற்பட்டுள்ளது. (ஹல்டி = மஞ்சள்). மஹாராணா பிரதாப் தன் வீரத்தை வெளிப்படுத்திய இந்த போர்க்களம் அவரது புகழ்பெற்ற குதிரையான சேதக் இறந்த இடமாகவும் சொல்லப்படுகிறது.

இந்த போர்க்களத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் சேதக் குதிரைக்கு எழுப்பப்பட்ட சமாதிக்கல் காணப்படுகிறது. வெள்ளைப்பளிங்கு கல்லால் எழுப்பப்பட்டுள்ள இந்த சமாதிக்கல்லானது ஒரு விசுவாசமான குதிரைக்கான புகழாரமாக நிலைத்து நிற்கிறது.

இந்த ஸ்தலத்துக்கு அருகிலேயே உள்ள பலிச்சா எனும் கிராமம் சுடுமண் கைவினைப்பொருட்களுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. மேலும் இங்குள்ள ‘பஷாஹி பாக்’ என்னும் இடத்தில் மருத்துவ குணம் வாய்ந்த பன்னீர் மற்றும் குல்கந்து பொருட்கள் பிரசித்தமாக தயாரிக்கப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Jul,Wed
Return On
02 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Jul,Wed
Check Out
02 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Jul,Wed
Return On
02 Jul,Thu