Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உதய்பூர் » ஈர்க்கும் இடங்கள் » கும்பல்கர் காட்டுயிர் சரணாலயம்

கும்பல்கர் காட்டுயிர் சரணாலயம், உதய்பூர்

62

உதய்பூரிலிருந்து 65 கி.மீ தூரத்தில் உள்ள கும்பல்கர் காட்டுயிர் சரணாலயம் உதய்பூர்பாலிஜோத்பூர் சாலையில் அமைந்துள்ளது. இங்கு கும்பல்கர் எனும் கோட்டையும் உள்ளது. 578 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள இந்த சரணாலயம் இந்த கோட்டையின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

ராஜ்சாமந்த், உதய்பூர் மற்றும் பாலி மாவட்டங்களின் பகுதிகளை இது உள்ளடக்கியுள்ளது.ராஜஸ்தானிலுள்ள சரணாலயங்களிலேயே இங்கு மட்டுமே ஓநாய் காணப்படுகிறது.

அது தவிர கழுதைப்புலி, குள்ள நரி, சிறுத்தை, கரடி, காட்டுப்பூனை, சாம்பார் மான், நில்கை மான், நான்கு கொம்பு மான், சிறுமான் மற்றும் முயல்கள் ஆகிய விலங்குகள் இங்கு வசிக்கின்றன.

கோடைக்காலத்தின்போது பயணிகள் இங்கு ஓநாய்கள் கூட்டமாக நீர்நிலைக்கு வருகை தருவதை காண முடியும். பறவை ரசிகர்களுக்கும் இந்த சரணாலயம் மிகவும் ஏற்றதாகும்.

மேலும், இங்கு சாம்பல் காட்டுக்கோழிகளை அதிக அளவில் பார்க்கலாம். மேலும் புறா, மயில், சிவப்பு நக ஆந்தை, பச்சைக்கிளி, மாங்குயில், சின்னான் சிட்டு, சாம்பல் புறா மற்றும் வெள்ளைக்கழுத்து மீன்கொத்தி போன்ற பறவைகள் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன.

இந்த சரணாலயத்தை சுற்றிப்பார்க்க குதிரை சஃபாரி வசதிகள் உள்ளன. இது இயற்கை ரசிகர்களுக்கு விருப்பமான அனுபவமாக இருக்கக்கூடும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
06 Apr,Mon
Return On
07 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
06 Apr,Mon
Check Out
07 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
06 Apr,Mon
Return On
07 Apr,Tue