மஹாராணா பிரதாப் மெமோரியல் எனப்படும் இந்த நினைவகம் மோத்தி மாக்ரி அல்லது முத்து மலை என்றழைக்கப்படும் குன்றின்மீது ஃபதேஹ் சாஹர் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் பெயர் பெற்ற வீரரான மஹாராணா பிரதாப் மற்றும் சேதக் எனப்படும் அவரது குதிரைக்காக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுச்சின்னமாகும்.
இந்த நினைவகத்தில் பயணிகள் மஹாராணா பிரதாப் மற்றும் சேதக் இருவரின் தத்ரூப சிலைகளைப்பார்க்கலாம். இங்கு மலைக்கு அருகிலுள்ள ஜப்பானிய பாறைத்தோட்டமும் பயணிகள் காணவேண்டிய முக்கிய அம்சமாகும். உதய்பூரின் சிதிலமடைந்த கோட்டை ஒன்றையும் இந்த ஸ்தலத்தில் காணலாம்.



Click it and Unblock the Notifications