ராஜ் அங்கண் என்பது கோல் மஹால் என்றழைக்கப்படும் ஒரு அழகிய குமிழ்வடிவ மண்டப அமைப்பை குறிப்பிடுகிறது. இது மஹாராணா உதய் சிங் அவர்களால் 1572ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
மன்னர் குடிமக்களை சந்திக்கும் முற்றமாக இது பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் வடிவமைப்பு தாஜ் மஹாலை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மண்டபத்தின் மைய அரங்கில் பயணிகள் முன்னாள் மேவார் அரசர்களின் உருவ ஓவியங்களை பார்க்கலாம்.
மஹாராணா பிரதாப் சிங்கின் சில பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் ஒருபகுதி அவரது விசுவாச குதிரையான சேதக்’க்கின் நினைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications