ரத்னகிரி, உதயகிரியிலிருந்து சுமார் 73 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நகரின் பரபரப்புகளிலிருந்து ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இந்த தனிமையான, நிச்சலனமான இடமாகிய இது, அநேகமாக எவ்விதத் தொந்தரவுமின்றி தியானம் செய்வதற்காக புத்த பிக்ஷுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பிராமணி மற்றும் பிரூபா ஆகிய நதிகளின் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் ரத்னகிரி, நேர்த்திக்கடனுக்காக நடப்பட்ட ஸ்தூபிகளின் தொகுதியினால் சூழப்பட்டிருக்கும் ஒரு பெரிய ஸ்தூபியின் சிதிலங்கள் மற்றும் சில புத்த விகாரங்களின் கதவு நிலைகள் மற்றும் அலங்காரமான ஜன்னல் மேற்கூரைகள் அடங்கிய இடுபாடுகளையும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறது.
கோணல் வரைகளைக் கொண்டிருக்கும் கோபுரத்துடன் இங்கு காணப்படும் கோயில் ஒன்று அரிய வகைக் கோயிலாகும். அகழ்வாராய்ச்சியின் போது தோண்டியெடுக்கப்பட்ட, வெண்கலம் மற்றும் பித்தளையால் ஆன ஏராளமான புத்தர் சிலைகளும் ரத்னகிரி அருங்காட்சியகத்தில் இதர முக்கிய கண்டுபிடிப்புகளோடு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவ்வகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட இந்து மத பெண் தெய்வங்களின் ஏராளமான ஓவியங்கள், இந்த அருங்காட்சியகத்தின் காட்சிக்கூடத்தில் அணிவகுக்கின்றன.
ரத்னகிரி வருடம் முழுவதிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது. புத்த மதத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது பிற மதங்களைச் சேர்ந்த பயணிகளும் ரத்னகிரியின் சுற்றுச்சூழல் எங்கும் நிறைந்திருக்கும் புத்த மதத்தின் தெய்வீகத்தை மனதார அனுபவித்து திளைக்கின்றனர்.



Click it and Unblock the Notifications