ஹட்டியங்காடியிலுள்ள சித்தி விநாயகர் கோயில் 8 ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். குண்டப்பூர் தாலுக்காவிலுள்ள இந்த கோயிலில் விநாயக்க் கடவுள் சிலை உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்களுக்கு இது முக்கியமான புண்ணிய யாத்ரீக ஸ்தலமாக அறியப்படுகிறது.
வராஹி ஆற்றின் அருகில் இந்தக்கோயில் அமைந்துள்ளது. விநாயகக் கடவுள் ஜடா முடியுடன் காணப்படும் விக்கிரகத்தை கொண்ட ஒரே கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டரை அடி உயரம் உள்ள இந்த விக்கிரகம் சாளிக்கிராம கல்லால் ஆனது.இந்த விக்கிரகத்தின் துதிக்கை இடது புறமாக திரும்பியுள்ளது.
பல்வேறு திருவிழாக்களின் போது விசேட பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன. பக்தர்களுக்கு வேண்டியதை கொடுத்து சித்தியளிப்பவர் என்பதால் இந்த விநாயகக்கடவுள் சித்தி விநாயகர் என்று அழைக்கப் படுகிறார்.
ஹட்டியங்காடி குண்டப்பூரிலிருந்து வடகிழக்காக 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. உடுப்பி சென்று அங்கிருந்து ஹட்டியங்காடி செல்ல வேண்டியுள்ளது. உடுப்பி சென்று அங்கிருந்து குண்டப்பூரை தாண்டி சென்றால் முருடீஸ்வரா வருகிறது. அங்கிருந்து மற்றும் ஒரு 9 கி.மீ பயணம் செய்து வலது புறம் திரும்பினால் இந்த கோயிலை அடையலாம்.



Click it and Unblock the Notifications