Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆக்ரா » ஈர்க்கும் இடங்கள் » திவான் இ காஸ்

திவான் இ காஸ், ஆக்ரா

76

திவான் இ ஆம் அமைப்பைப்போன்றே இந்த திவான் இ காஸ் எனப்படும் அரசக்கூடம் ஆக்ரா கோட்டை வளாகத்தில் அமைந்திருக்கிறது. இந்த திவான் இ காஸ் கூடம் ஷாஜஹான் மன்னரால் 1635ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது.

திவான் இ ஆம் பொதுக்குடி மக்களை மன்னர் சந்திப்பதற்காக பயன்பட்டதென்றால், இந்த திவான் இ காஸ் மாளிகையானது மன்னர் ராஜ விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.

வெளிநாட்டு தூதர்கள், விருந்தினர்கள் போன்றோர் இந்த மாளிகைக்கூடத்தில் மன்னரை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவதற்கேற்ப இது கட்டப்பட்டிருக்கிறது. எனவே இந்த திவான் இ காஸ் முகலாயர் காலத்தில் ஒரு அரசியல் சக்திக்கேந்திரமாக திகழ்ந்திருக்கிறது.

இந்த கூடத்தின் மாடிப்பகுதியில் இரண்டு கம்பீர இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒன்று அரசர் உட்காருவதற்காக வெண்பளிங்குக்கல்லாலும் மற்றொன்று விருந்தினர் அமர்வதற்காக கருப்பு சிலேட்டு கல்லாலும் அமைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவை தவிர இந்த கூடம் முழுவதும் அபூர்வ ஆபரண கற்களாலும் தங்கம் வெள்ளியால் ஆன அலங்கார அமைப்புகளாலும் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த கூடத்தின் கூரைப்பகுதியானது மரப்பலகையால் மூடப்பட்டு அவை தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன தகடுகளால் போர்த்தப்பட்டிருக்கின்றன. வெள்ளித்தகடுகள் சூரிய வெளிச்சத்தை அதிகப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தூண்களைக்கொண்ட வாசல்கள் வழியாக இந்த கூடத்திற்குள் நுழையவேண்டியுள்ளது. இந்த கூடத்தை ஒரு சொர்க்கமாகவும் பேரரசரை அதன் சூரியனாகவும் குறிப்பிடும் ஒரு வாசகமும் இந்த கூடத்திற்குள்ள பொறிக்கப்பட்டிருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue