Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆக்ரா » ஈர்க்கும் இடங்கள் » குரு கா தால்

குரு கா தால், ஆக்ரா

76

ஆக்ரா நகரத்தில் ஒரு வரலாற்று முக்கியவத்துவம் வாய்ந்த குருத்வாரா இந்த குரு கா தால் ஆகும். இது ஆக்ராவின் எல்லைப்பகுதியில் பலுச்புரா ரயில் நிலையம் மற்றும் சிக்கந்த்ரா ஆகிய இடங்களுக்கு அருகில் உள்ளது.

1970ம் ஆண்டு சீக்கிய இனத்தாரின் ஒன்று பட்ட முயற்சி மற்றும் பொருளாதார ஆதரவில் இது கட்டப்பட்டிருக்கிறது. சந்த் பாபா சாது சிங் ஜி மௌனி எனும் குரு இதன் நிர்மாணத்திற்கு தலைமையேற்று வழிகாட்டியுள்ளார்.

இந்த சீக்கிய வழிபாட்டுத்தலம் சீக்கியர்களின் ஒன்பதாவது குருவாகிய ஷீ குரு தேக் பகதூர்ஜி அவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இங்கு ஒரு தீர்த்தக்குளமும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே ஸ்தலத்தினல்தானலந்த சீக்கிய குரு ஔரங்கச்சிப்பின் படையினரிடம் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது.

முன்னர் இந்த தீர்த்தக்குள பகுதியில் 12 கோபுரங்கள் இருந்ததாகவும் அவற்றில் 8 மட்டுமே தற்போது மீதமிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவற்றில் கற்சிற்ப அலங்கார வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.

சிவப்புக்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த குருத்வாரா முகலாய பாணி கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ளது. இதன் முகப்பானது ஆக்ரா கோட்டை மற்றும் ஃபதேபூர் சிக்ரி ஆகியவற்றை ஒத்திருக்கிறது.

எல்லா மதங்களையும் சேர்ந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள்  இந்த குருத்வாராவிற்கு அதிக எண்ணிக்கையில் விஜயம் செய்கின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Jun,Sun
Return On
29 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Jun,Sun
Check Out
29 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Jun,Sun
Return On
29 Jun,Mon