Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆக்ரா » ஈர்க்கும் இடங்கள் » ஜஸ்வந்த் கி சாத்ரி

ஜஸ்வந்த் கி சாத்ரி, ஆக்ரா

76

ஜஸ்வந்த் கி சாத்ரி எனப்படும் இந்த நினைவு மாடம் ராஜஸ்தானிய பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு குமிழ் மாட அமைப்பாகும். இது ஹிந்து மற்றும் முகாலயக்கட்டிடக்கலை அம்சங்கள் கலந்து காட்சியளிக்கிறது.

ஜஸ்வந்த் கி சாத்ரி என்று அழைக்கப்பட்டாலும் இந்த மாடம் ஜஸ்வந்த் சிங்கிற்காக அமைக்கப்பட்டதல்ல. மாறாக ராஜஸ்தானிய புண்டி ராஜ்ஜிய இளவரசியான ரான் ஹதாவிற்காக இது அமைக்கப்பட்டிருக்கிறது. இவர் ஆக்ரா கோட்டையில் 1644ம் ஆண்டில் மரணமடைந்த ‘ரத்தோர் மன்னர் அமர் சிங்கின்’ மனைவியாவார்.

சொல்லப்பட்டு வரும் கதைகளின்படி தனது கணவரின் சிதையில் ஹதா ராணி சதி எனும் உடன்கட்டை ஏறியதாக சொல்லப்படுகிறது. பின்னர் இந்த ராணியின் நினைவாக அமர்சிங்கின் சகோதரரான ஜஸ்வந்த் சிங் இந்த நினைவு மாடத்தை எழுப்பியுள்ளார்.

இருப்பினும் யாருக்காக கட்டப்பட்டதோ அவர் பெயரில் அறியப்படாமல் யார் கட்டியவரோ அவரது பெயரில் இந்த நினைவு மாடம் அழைக்கப்பட்டு வருகிறது.

1644-58ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த நினைவு மாடம் முகலாயர் ஆட்சியின்போது கட்டப்பட்ட ஒரே ஹிந்து வரலாற்றுச்சின்னமாக வீற்றிருக்கிறது. யமுனை நதிக்கரையை ஒட்டி ராஜ்வாரா எனும் இடத்தில் இந்த நினைவு மாடம் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Apr,Thu
Return On
10 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Apr,Thu
Check Out
10 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Apr,Thu
Return On
10 Apr,Fri