Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆக்ரா » ஈர்க்கும் இடங்கள் » காஞ்ச் மஹால்

காஞ்ச் மஹால், ஆக்ரா

76

சிக்கந்த்ரா எனும் இடத்தில் அக்பரின் கல்லறை மாளிகைக்கு அருகே இந்த சதுரவடிவிலான காஞ்ச் மஹால் எனும் உன்னதமான மாளிகை முகாலயர் கால  கட்டிடக்கலையின் முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும் சின்னமாக அமைந்திருக்கிறது.

1605ம் ஆண்டிலிருந்து 1619ம் ஆண்டு வரை இதன் கட்டுமானம்  நிகழ்ந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. அபரிமிதமான வண்ண ஓடுகள் இதில் பதிக்கப்பட்டிருப்பதால் இதற்கு காஞ்சன் மஹால் என்ற பெயர் வந்துள்ளது.

இதன் வெளிப்புறம் சாந்துப்பூச்சால் பூசப்பட்டு குழி குழியான அலங்கார வடிவமைப்புடன் காட்சியளிக்கிறது. இந்த குழிவுகளில் மதுரசக்குடுவைகள், மலர்க்கொடிகள் மற்றும் திரிகோணமிதி ஓவியங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த அரண்மனை மாளிகையானது துவக்கத்தில் அந்தப்புர மகளிர் இருப்பிடமாக பயன்படுத்தப்பட்டு பின்னர் ஜஹாங்கீர் மன்னரால் ஷிகார்கர் எனப்படும் வேட்டை மாளிகையாக மாற்றப்பட்டிருக்கிறது.

இரண்டு அடுக்குகளை கொண்டுள்ள இந்த மாளிகையின் நாலா புறமும் நான்கு சதுர அறைகள் காணப்படுகின்றன. பிரதான கூடத்தில் காற்றும் வெளிச்சமும் நன்கு ஊடுறுவும்படியாக இரண்டு திறப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜரோக்கா எனப்படும் சல்லடை ஜன்னல்கள் மற்றும் பலகணிகளோடு இந்த மாளிகையின் அறைகள் காணப்படுகின்றன. மேலும் மாளிகையை சுற்றி ஒரு பூங்கா, நீர்வழிப்பாதைகள், தடாகங்கள் போன்ற பயன்பாட்டு அம்சங்கள் துல்லியமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue