Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஆக்ரா » ஈர்க்கும் இடங்கள் » மூஸாம்மான் புர்ஜ்

மூஸாம்மான் புர்ஜ், ஆக்ரா

76

மூஸாம்மான் புர்ஜ் எனப்படும் இந்த கோபுரம் சமான் புர்ஜ் அல்லது ஷா புர்ஜ் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது ஆக்ரா கோட்டையின் உள்ளே ஷாஹஹான் கட்டிய திவான் இ காஸ் மாளிகைக்கு அருகே அமைந்திருக்கிறது.

எண்கோண வடிவமைப்புடன் காட்சியளிக்கும் இந்த கோபுரம் ஷாஜஹான் மன்னரால் அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோபுரத்திலிருந்து தாஜ் மஹாலின் அழகை நன்கு பார்த்து ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பல அடுக்கு கோபுரத்தில் விலைமதிப்பற்ற கற்கள் அதிகமாக பதிக்கப்பட்டிருக்கின்றன. இதன் சுவர்ப்பகுதியில் சல்லடைச்சன்னல்கள் அலங்கரிக்கப்பட்ட குழிவு அமைப்புகளுடன் காணப்படுகின்றன.

இவற்றின் மூலம் அந்தப்புர மகளிர் வெளியே நடப்பவற்றை பார்த்து ரசிக்கும் நோக்கத்துடன் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கலையம்சம் கொண்ட நீரூற்று அமைப்பைக்கொண்டிருக்கும் இதன் மையக்கூடத்தை ஒட்டி ஒரு தாழ்வாரமும் உள்ளது.

வரலாற்றின் சில சோக நாடகங்களும் இந்த மூஸாம்மான் புர்ஜ் கோபுர மாளிகையில் அரங்கேறியுள்ளன. அதாவது, ஔரங்கசீப் மன்னர் தனது தந்தை ஷாஜஹானையும் சகோதரி ஜஹன்னரா பேகத்தையும் இங்குதான் சிறைப்படுத்தி வைத்திருந்தார்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Jun,Sun
Return On
29 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Jun,Sun
Check Out
29 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Jun,Sun
Return On
29 Jun,Mon