தனது நினைவுக்குறிப்புகளில் ஃபிருஸ்கான் க்வாஜாசராய் என்பவர் பற்றி ஜஹாங்கீர் மன்னர் குறிப்பிட்டிருந்தாலும் இவர் உண்மையில் ஷாஜஹான் மன்னரின் அவையில் இடம் பெற்றிருந்த ஒரு அறிஞர் ஆவார். இவரது க்வாஜா செராய் எனும் அடைமொழி இவர் அந்தப்புர மகளிர் இருப்பிடத்திற்கான பொறுப்பை ஏற்றிருந்ததை குறிப்பிடுகிறது.
1647ம் ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி மரணமடைந்த ஃபிருஸ்கான் அப்போதைய வழக்கப்படி தனக்கான கல்லறை மாளிகையை முன்பே எழுப்பி அதற்கு தல் ஃபிருஸ் கான் என்றும் பெயரிட்டிருந்தார்.
ஆக்ராவிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் குவாலியர் சாலையில் இந்த சிவப்புக்கல்லால் ஆன கல்லறை மாளிகை அமைந்துள்ளது. இரண்டு அடுக்குகளை கொண்டிருக்கும் இந்த வளாகத்துக்குள் அதன் தென்புறத்தில் உள்ள விதான வளவு வாசலின் வழியாக நுழையலாம்.
ஃபிருஸ்கான் க்வாஜாசராயின் சமாதி 40 அடி எண்கோண சதுர பீட அமைப்பின்மீது அரவட்ட மாடக்கூரைக்கு கீழே அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேற்குத்திசையில் ஒரு சிறிய மசூதியும் உள்ளது.
அக்பர் கல்லறை மற்றும் இதிமத் உத் தௌலா கல்லறைகளின் வடிவமைப்பை பின்பற்றியே இந்த ஃபிருஸ்கான் க்வாஜாசராய் கல்லறையும் அமைக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications