சன்ஸ்கார் கேந்த்ரா எனும் இந்த கலாச்சார மையம் உலகப்புகழ் பெற்ற கட்டிடக்கலை நிபுணரான லா கோர்புசீயர் என்பவரால் 1954ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. இது தாகூர் ஹால் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் போன்றவற்றுக்கு அருகில் உள்ளது.
நவீன கட்டிடக்கலைக்கான ஒரு மிகச்சிறந்த உதாரணமாக இந்த கட்டிடம் காட்சியளிக்கிறது. தற்போது வாஸ்து ஷில்ப ஃபவுண்டேஷன் எனும் அமைப்பு இந்த கட்டிடத்தை பராமரித்து வருகிறது.
இந்த சன்ஸ்கார் கேந்த்ரா கலாச்சார மையத்தில் அஹமதாபாத் நகரம் குறித்த வரலாற்று பின்னணியை சித்தரிக்கும் பல்விதமான சான்றுகள் தொகுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
பழம்பொருட்கள், சிற்பங்கள், ஓவியங்கள், குறிப்புகள், புகைப்படங்கள் போன்றவை இங்குள்ள காட்சிக்கூடங்களில் இடம்பெற்றிருக்கின்றன. பானு ஷா என்பவர் சேகரித்து வைத்திருந்த பலவிதமான காற்றாடிகளையும் இங்கு பார்க்கலாம்.
21 வயதிலிருந்து தாம் சேகரித்த காற்றாடிகளின் சேகரிப்பை அவர் இந்த அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக அளித்துள்ளார்.



Click it and Unblock the Notifications