சிதி சயீத் மஸ்ஜித் எனும் இந்த மசூதி 1573ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. முகலாய ஆட்சியின்போது அஹமதாபாத் நகரத்தில் கட்டப்பட்ட கடைசி மசூதி இது.
இதன் ஜன்னல் அமைப்புகளில் காணப்படும் சல்லடை சாளர அமைப்பு உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்றுள்ள கட்டிடக்கலை அம்சமாகவும் இந்நகரத்தி அடையாளமாகவும் அறியப்படுகிறது.
வெகு நுண்னியமான கைவினைத்திறனை வெளிப்படுத்தும் இந்த அலங்கார அமைப்பு அக்காலத்திய கட்டிடக்கலை மேன்மைக்கு ஒரு சான்றாகும்.
சந்தடி மிகுந்த கடைத்தெருவில் அமைந்திருக்கும் போதிலும் இந்த மசூதி தனது தனித்தன்மையான கலையம்சங்களால் பயணிகள் மனதை பெரிதும் கவரும் வகையில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications