யேனியர் கோயில்களுக்கு தெற்கே அமைந்துள்ள இந்த ராமலிங்கா கோயில்கள் ஏஹோல் வரும் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு ஸ்தலமாகும். திரிகூடாச்சல பாணி கோயிலான இந்த ராமலிங்கா கோயில் இந்த தொகுப்பிலுள்ள கோயில்களில் பெரிய கோயிலாகும்.
இங்குள்ள மூன்று அறைகளில் இரண்டில் சிவலிங்கமும் மூன்றாவதில் பார்வதி சிலையும் காணப்படுகிறது. 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாக கருதப்படும் இந்தக்கோயிலில் இரண்டு கடம்பரநகர கோபுரங்கள் அமைந்துள்ளன.
மலப்பிரபா ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் தொகுப்பில் ஒரு சிறிய மசூதியும் காணப்படுகிறது. இந்த ராமலிங்கா கோயில் ஸ்தலத்தில் வருடாவருடம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்துக்கிடையில் தேர்த்திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications