பாம்புக் கடவுளான நாகராஜாவுக்காக எழுப்பப்பட்டுள்ள இந்த மன்னாரசாலா ஸ்ரீ நாகராஜா கோயில் கேரளாவில் பிரசித்தமான கோயில்களில் ஒன்றாகும். உலகமுழுதுமே உள்ள முக்கியமான பாம்புக்கோயில்களில் ஒன்றாக கருதப்படும் இந்த மன்னாரசாலா ஸ்ரீ நாகராஜா கோயிலைப்பற்றி பல புராணக்கதைகள் சொல்லப்படுகின்றன.
விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் இந்த கோயிலுக்கு அருளை வழங்கியுள்ளார் என்பது அவற்றில் ஒன்றாகும். சக்தி உடையதாக நம்பப்படும் இக்கோயில் தெய்வம் குறிப்பாக பெண்களுக்கு புத்திர பாக்கியத்தை அளிப்பதாக சொல்லப்படுகிறது.
விசேஷ சடங்குகள், பூஜைகள் மற்றும் நடைமுறைகள் போன்றவை இக்கோயிலில் நாகராஜாவுக்காக செய்விக்கப்படுகின்றன. இது தவிர தங்க ஆபரணங்கள், பாத்திரங்கள், பால், பழங்கள், மஞ்சள் போன்ற பொருட்கள் பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்படுகின்றன.
பாம்புக்கடவுளின் இயல்புக்கேற்றபடி ஒரு அடர்ந்த கானகத்தின் மத்தியில் இந்த கோயில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலுக்கு செல்லும் பாதையில் நாகராஜாவின் பல்வேறு ரூபங்களைக்கொண்ட சிலைகளையும் பார்க்க முடிகிறது.



Click it and Unblock the Notifications