பேர் பாபா புத்தா என்பது தங்கக்கோயில் வளாகத்திலுள்ள மூன்று புனிதமான மரங்களின் ஒன்றாகும். லச்சி பேர் மற்றும் துக் பஞ்சனி பேர் என்பவை இதர இரண்டு மரங்களின் பெயர்களாகும்.
அம்ரித் சரோவர் தீர்த்தக்குளத்தில் வடக்கு கரையில் அமைந்திருக்கும் இந்த ஜுஜுபே மரத்திற்கு பாபா புத்தா எனும் முக்கியமான சீக்கிய குருவின் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
குடை போன்ற மரக்கிளைகளுடன் காணப்படும் இந்த மரத்தின் நிழலில் அமர்ந்தவாறு பாபா புத்தா குளம் தோண்டும் பணிகளை மேற்பார்வையிட்டதாக சொல்லப்படுகிறது.
இவரது ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை மெச்சிய சீக்கிய குரு அர்ஜன் தேவ்ஜி இவருக்கு 1604ம் ஆண்டில் ஆதி கிரந்த் நூல் ஹர்மந்திர் சாஹிப் ஸ்தலத்தில் வைக்கப்பட்டபோது அதனைக்காக்கும் ‘கிரந்தி’ பொறுப்பை அளித்தார்.
தங்கக்கோயிலின் முதல் தலைமை குருவாக திகழ்ந்த இவர் தனது கடைசி நாட்களை தற்போது பேர் பாபா புத்தா சாஹிப் குருத்வாரா அமைந்துள்ள ராம்தாஸ் கிராமத்தில் கழித்தார்.



Click it and Unblock the Notifications