Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அம்ரித்ஸர் » ஈர்க்கும் இடங்கள் » துக் பஞ்சனி பேர் (புனித மரம்)

துக் பஞ்சனி பேர் (புனித மரம்), அம்ரித்ஸர்

56

துக் பஞ்சனி பேர் என்று அழைக்கப்படும் இந்த புனித மரம் அம்ரித் சரோவர் தீர்த்தக்குளத்தின் கிழக்கு கரையில் உள்ளது. தங்கக்கோயில் வளாகத்திலுள்ள மூன்று முக்கியமான புனித மரங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

முற்காலத்தில் இந்த மரத்தை ஒட்டி அமைந்திருந்த ஒரு சிறு குளம் பீபி ரஞ்சனி என்பவரின் கணவருக்கு இருந்த தொழு நோயை குணப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்த அதிசயம் பற்றி கேள்விப்பட்ட குரு ராம்தாஸ்ஜி அந்த சிறு குளத்தை ஒரு பெரிய தீர்த்தக்குளமாக மாற்றி அந்த மரத்துக்கு துக் பஞ்சனி பேர் என்ற பெயரையும் அளித்துள்ளார்.

அதாவது துக்கத்தை தீர்க்கும் மரம் என்பது அதன் பொருள். பின்னர் தனது மாமனாரும் முந்தைய சீக்கிய குருவும் ஆன அமர்தாஸ்ஜி என்பவரது ஆலோசனைப்படி இந்த ஸ்தலத்தையே சீக்கிய மதத்துக்கான தலைமைப்பீடமாக குரு ராம்தாஸ்ஜி உருவாக்கினார்.

துக் பஞ்சனி பேர் மரமும் அதன் அருகில் இருந்த சிறு குளமும் தான் இந்த அம்ரித்ஸர் நகரமும், ராம்சர் தீர்த்தக்குளமும், தங்கக்கோயிலும் உருவாக காரணமாக இருந்திருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
12 Jun,Fri
Return On
13 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
12 Jun,Fri
Check Out
13 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
12 Jun,Fri
Return On
13 Jun,Sat