குருத்வாரா ராம்சர் சாஹிப் அம்ரித்ஸர் நகரத்தின் தென்கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கிறது. எல்லா குருத்வாராக்களையும் போல இந்த சீக்கியக்கோயிலும் ராம்சர் சரோவர் எனும் தீர்த்தக்குளத்தை ஒட்டி அமைந்திருக்கிறது.
அம்ரித்ஸர் நகரில் உள்ள குளங்களிலேயே அளவில் சிறியதான இந்த ராம்சர் தீர்த்தம் குரு அர்ஜன் தேவ்ஜி அவர்களால் ஒரு அற்புத ஸ்தலமாக கண்டறியப்பட்ட ஸ்தலத்தில் வெட்டுவிக்கப்பட்டுள்ளது.
இந்த குருத்வாராவிற்கு குரு அர்ஜன் தேவ்ஜி தனது தந்தையான குரு ராம்தாஸ்ஜியின் பெயரையே இட்டுள்ளார். இந்த ஸ்தலத்திலிருந்துதான் கிரந்த சாஹிப் புனித நூல் பல இடங்களுக்கு புனிதப்பயணமாக எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது.
பயணத்தின் முடிவில் அது ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் தங்கக்கோயிலில் வைக்கப்பட்டது. தாமரை வடிவ கலச மாடம் மற்றும் சலவைக்கல்லால் ஆன மையக்கூடம் போன்றவற்றுடன் காட்சியளிக்கும் இந்த குருத்வாரா பயணிகள் காண வேண்டிய ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும்.



Click it and Unblock the Notifications