கைர் உத்தின் மஸ்ஜித் எனப்படும் இந்த வரலாற்று கால மசூதி அம்ரித்ஸர் நகரில் காந்தி கேட் அருகே ஹால் பஜார் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது. இந்திய சுதந்திரப்போராட்ட நிகழ்வுகளுடன் தொடர்புடைய வரலாற்றுப்பின்னணியையும் இது பெற்றிருக்கிறது. \
முஹமத் கைர் உத்தின் என்பவரால் 1976ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதி ஸ்தலத்தில் தான் ஆங்கிலேயருக்கு எதிரான கலக முயற்சிகள் துவக்கப்பட்டன. டூட்டி ஏ ஹிண்ட் மற்றும் ஷா அதாவுல்லா புக்காரி ஆகியோர் இந்த கலகத்திற்கு தலைமை தாங்கியுள்ளனர்.
அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த மசூதி அமைப்பு அம்ரித்ஸர் நகரில் வசிக்கும் முஸ்லிம் இனத்தாரால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு ஆன்மீக வழிபாட்டுத்தலமாக இருந்து வருகிறது.
தொழுகை நேரத்தில் இந்த மசூதியின் முற்றத்தில் நூற்றுக்கணக்கானோர் தொழுகையில் ஈடுபட்டுள்ள காட்சியை காணலாம். வரலாற்று சின்னம் மற்றும் வழிபாட்டு தலம் போன்ற அடையாளங்களை கொண்ட இந்த மசூதி அம்ரித்ஸர் நகரில் பார்க்க வேண்டிய சிறப்பம்சங்களில் ஒன்றாக வீற்றிருக்கிறது.



Click it and Unblock the Notifications