ஒவ்வொரு வருடமும் அதிக அளவில் பயணிகளால் விஜயம் செய்யப்படும் இந்த் ஜாமியா மஸ்ஜித் பட்கல் நகரில் முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இந்த மஸ்ஜித்தில் தங்கத்தால் ஆன குமிழ் கோபுரம் அமைந்துள்ளது. இதனால் இது சின்னட பள்ளி எனும் பெயரையும் பெற்றுள்ளது.
மூன்று தளங்களையும் ஒரு தரையடித்தளத்தையும் பெற்றுள்ள இந்த மசூதியில் ஒரே சமயத்தில் 10000 பேர் தொழுகையில் ஈடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசூதிக்கு அருகிலேயே சமுதாய பிரச்சினைகளை தீர்க்கும் முக்காமா-இ-ஷரியா அலுவலகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications