முகப்பு » சேரும் இடங்கள் » பிலாஸ்பூர் » ஈர்க்கும் இடங்கள்
 • 01ரத்தன்பூர்

  பிலாஸ்பூரில் இருந்து 25கிமீ தொலைவில் உள்ள ரத்தன்பூர் தேசிய நெடுஞ்சாலை எண் 200ல் உள்ளது. பல்வேறு வம்ச அரசுகளை நினைவுப்படுத்தும் இடமாக திகழ்கிறது. பாபா பைரவநாத்தின் ஒன்பது அடி சிலை ஒன்று இங்குள்ளது.

  சத்தீஸ்கரின்  புராதான தலைநகர் என்ற பெருமையும் இதற்குண்டு. ரதன்ராக் என்பவரால் 11ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஊர் ஹைஹையவன்சி வம்சத்தின் தலைநகராகவும் விளங்கியது.

  ரத்தன்பூரின் மஹமாயா கோவில் புகழ்பெற்று விளங்குகிறது. ரத்னேஷ்வர் மஹாதேவ் கோவில் மற்றும் லட்சுமி தேவி கோவிலும் தனித்துவத்துடன் விளங்குகின்றன. பாலியில் இருந்து 30கிமீ தொலைவிலும், நிர்தியில் இருந்து 15கிமீ தொலஒவிலும் உள்ளது.

  மராத்திய அரசர் பிம்பாஜி போன்ஸ்லே இங்கு ராம்தேக் என்ற மற்றொரு கோவிலையும் கட்ட அந்த கோவிலும் புகழ்பெற்று விளங்குகிறது. .இங்குள்ள கோட்டை ஒன்றும் புகழ்பெற்று விளங்குகிறது.

  கங்கா ஜமுனா சிலை, பழங்கால கற்சிலை, பிரம்மன், விஷ்ணு, சிட்சுரோய், ஜகந்நாத், தந்தவ் நடனம் ஆகிய சிலைகள் இங்கு உள்ளன,

  + மேலும் படிக்க
 • 02தலக்ராம்

  பிலாஸ்பூரில் இருந்து 25கிமீ தொலைவில் உள்ள இந்த ஊர் போஜ்பூர்-தகோரி சாலையில் உள்ளது, தியோராணீ-ஜெதானி கோவில் என்ற 5ஆம் நூற்றாண்டு கோவில் இங்குள்ளது,

  7அடி உயரம், 4அடி அகலமும் உள்ள சிலை ஒன்று இக்கோவிலில் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னும் இந்த சிலைக்கு பெயரிடப்படவில்லை.

  ருத்ர சிவாவிற்கு புகழ்பெற்ற இந்த கோவிலை ஒட்டி மணியாரி நதி ஓடுகிறது. ராய்பூர் விமான நிலையம் அருகிலேயே உள்ளது.

  + மேலும் படிக்க
 • 03அசனாக்மர் வனவுயிர் சரணாலயம்

  தொல்பொருள் தளங்கள், மதம்சார்ந்த தளங்கள் மட்டுமல்லாது வனப்பகுதிகளும் இங்கு அதிகமாக உள்ளன. சட்டீஸ்கரின் புகழ்பெற்ற சரணாலயமாக 1945ல் உருவாக்கப்பட்ட அசனாக்மர் விளங்குகிறது.

  அழியக்கூடிய உயிரனிங்களான சிறுத்தைகள், பெங்கால் புலிகள், காட்டெருமைகள் ஆகியவை இங்கு உள்ளன. அதுமட்டுமின்றி சித்தல், வரிக்கழுதைப்புலி, கேனிஸ், கரடி, தோல், சம்பார் மான், நீள்கை, நான்கு கொம்பு மான், சிங்கரா ஆகிய விலங்குகளும் உண்டு.

  557.55 சதுர கிமீ பரப்பளவில் உள்ள இந்த சரணாலயத்தில் ஏராளமான உயிரினங்கள் உள்ளன. பிலாஸ்பூருக்கு வடக்கே உள்ள இப்பகுதியில் மழைக்காலத்தில் மக்கள் நுழைய தடை உள்ளது. மத்திய பிரதேசத்தின் கன்ஹா சரணாலயம் கன்ஹா-அசனாம்கருடன் இணைக்கப்பட்டுள்ளது. சால், சாஜா, பிஜா, மூங்கில் ஆகிய தாவரங்களும் இங்கு காணப்படுகின்றன.  

  கொங்காபாணி ஜலஷ்யா அணை, சரணாலயத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. பயணிகள் இங்கு தங்கமுடியாததால் அசனம்கரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கலாம்.  பெலாகானா ரயில் நிலையம் அருகிலேயே உள்ளது. மேலும் வாடகைக் கார்கள் மூலமும் பயணிகள் இங்கு வரலாம்.

  + மேலும் படிக்க
 • 04மால்ஹர்

  மால்ஹர்

  பிலாஸ்பூரில் இருந்து 40கிமீ தொலைவில் உள்ள மால்ஹர் ஒருகாலத்தில் சட்டீஸ்கர் தலைநகரமாக இருந்தது. முக்கியமான தொல்பொருள் இடமாகவும் விளங்குகிறது.

  பட்டெலேஷ்வர் கோவில், தேவ்ரி கோவில், திந்தேஷ்வரி கோவில் போன்ற 10, 11ஆம் நூற்றாண்டு கோவில்கள் இங்கு உள்ளன. ஜைன மத தடையங்களும் இங்கு நிரம்பக் கிடைக்கின்றன.

  கிபி1000ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்சுரி வம்சத்தின் மிச்சங்கள் இங்கு கிடைக்கின்றத. படலேஷ்வர் கெதார் கோவிலில் உள்ள கோமுகி சிவலிங்கம் முக்கியமான சுற்றுலா ஈர்ப்பஅகும்.

  மல்ஹாரின் உள்ள அரசு அருங்காட்சியகம் பல வகையான புராண சிற்பங்களைக் கொண்டுள்ளது. சுவான்சாங் என்ற சீன வரலாற்று ஆசிரியர் இங்கு வந்து இந்த இடத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்.

  + மேலும் படிக்க
 • 05குட்டாகட்

  குட்டாகட்

  அழகிய அணையான குட்டாகர் ரத்தன்பூரில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ளது. பிலாஸ்பூர்-அம்பிகாபூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த இடம் சுற்றுலா பயணிகள் சுலபமாக அடையும் வகையில் உள்ளது.

  இந்த இடத்தின் இயற்கை அழகு மதிமயக்குவதாக உள்ளது. அணைக்கு அருகில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமாக வருகிறார்கள். இங்கிருக்கும் விருந்தினர் மாளிகை நீள நிற நீருடன் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Feb,Tue
Return On
21 Feb,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
20 Feb,Tue
Check Out
21 Feb,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
20 Feb,Tue
Return On
21 Feb,Wed