மதிமயக்கும் இயற்கை எழில் வாய்ந்த இந்த மலைமுகடு சம்பையில் இருந்து 64கிமீ தொலைவில் உள்ளது. மலைமுகட்டின் கூர்மையாக பாறைச்சரிவில் அமர்ந்தபடி பலமணிநேரம் தென்றலை ரசிக்கலாம். அங்கிருந்து கீழே பார்க்கும்போது வேறு உலகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வே ஏற்படுகிறது.
ட்ன்ட்லாங்க் கிராமத் தலைவரின் மகள் லியான்சியாரி சாவ்ங்ஃபியாங்கா என்ற குடிமகனுடன் காதல் கொண்டாள். அவனை கிராமத்தில் இருந்து விரட்டிய பின் லியான்சியாரி இந்த மலை முகட்டில் அமர்ந்து தன் காதலனை நினைத்து பல கவிதைகள் வடித்ததாக நம்பப்படுகிறது. சம்பையில் இருந்து பேருந்து மூலம் இந்த இடத்திற்கு பயணிக்கலாம்.



Click it and Unblock the Notifications