இண்டோ-மியான்மர் எல்லையில், 200சதுர கிமீ பரப்பளவில் உள்ள முர்லென் தேசியப்பூங்கா மிசோராமின் புகழ்பெற்ற பூங்காக்களில் ஒன்றாகும்.
மலை முகடுகள் நிறைந்த இங்கு பல வகையான அருகிவரும் உயிரினங்கள் உண்டு. தும்குயாய் காம் எனப்படும் பெரிய குகையும் உள்ளே உண்டு. அதுமட்டுமல்லாது காம்புய் என்ற இந்தியாவின் மிகப்பெரிய செங்குத்துப் பாறை ஒன்றும் இங்கு உள்ளது. ஏராளமான நதிகளும், சிறிய நதிகளும் இவ்வழியே ஓடுகின்றன.
இக்காடுகளின் அடர்த்தி அமேஜான் காடுகளின் அடர்த்தியுடன் ஒப்பிடப்படுவது இதன் சிறப்பம்சம். சூரிய வெளிச்சம் 1% மட்டுமே விழும் அளவிற்கு அடர்த்தியுடன் சில இடங்கள் இருப்பதால், திரும்ப முடியா காடு, ஏழு மனிதர்கள் காணாமல் போன இடம் என்றும் வழங்கப்படுகிறது.
இங்கு 15வகையான விலங்கினங்களும், 150வகை பறவை இனங்களும், 35வகை மூலிகளைகளும், 4வகை பழ மரங்களும் உள்ளன. அய்ஜ்வாலில் இருந்து சுற்றுலா பேருந்தின் மூலம் 245கிமீ பயணம் செய்து இலக்கை அடையலாம்.



Click it and Unblock the Notifications