சண்டிகர் நகரத்தின் 23 வது செக்டாரில் பால பவன் வளாகத்தில் இந்த இண்டர்நேஷனல் டால்ஸ் மியூசியம் எனும் சர்வதேச பொம்மைகள் காட்சியகம் அமைந்துள்ளது. சண்டிகரிலுள்ள இந்திய குழந்தைகள் நலவாழ்வு மன்றம் இந்த காட்சியகத்தை நிர்வகித்து வருகிறது.
1985ம் ஆண்டில் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த மையத்தில் பலவிதமான பொம்மைகள் மற்றும் தோல்பாவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
உலகிலுள்ள 25 க்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த பொம்மைகள் இங்கு சேகரிக்கப்பட்டிருக்கின்றன. ஜெர்மனி, ஸ்பெயின், கொரியா, டென்மார்க், நெதர்லாண்ட்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளைச்சேர்ந்த பொம்மைகள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
பாரம்பரிய இந்திய அம்சங்கள் மற்றும் உடைகளோடு காணப்படும் இந்திய பொம்மைகளுக்கென்று ஒரு தனிப்பிரிவும் உள்ளது. குழந்தைகளுக்கு பரவசமூட்டும் வகையில் அருங்காட்சியகத்தின் உள்ளேயே வெவ்வேறு பிரிவுகளை இணைக்கும் உல்லாச ரயில் ஒன்றும் இயக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications