சிக்மகளூர் பகுதியில் உள்ள முல்லையாநகரி மலை கர்நாடக மாநிலத்திலேயே உயரமான சிகரத்தைக்கொண்ட மலையாகும். இது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அங்கமான பாபா புதான்கிரி மலைகளில் அமைந்துள்ளது.
முல்லையநகரி மலை கடல் மட்டத்திலிருந்து 1930 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இமயமலையிலிருந்து நீலகிரி வரையிலுள்ள உயரமான மலைகளில் இதுவும் ஒன்றாகும். செம்ப்ரா, பனௌரா, போன்ற மற்ற உயரமான சிகரங்களின் வரிசையில் இந்த முல்லையாநகரி மலையும் உள்ளது. இந்த மலையில் வெப்பநிலை 200C ல் இருந்து250C வரை காணப்படுகிறது.
முல்லையாநகரி மலை உச்சியை அடைய சுற்றுலா பயணிகள் சர்பதாரி எனும் அடிப்பகுதியிலிருந்து மலை ஏற்றத்தை துவங்க வேண்டியுள்ளது. மலை உச்சியில் ஒரு சிவன் கோயிலும் உள்ளது. மலை ஏற்றம் தவிர்த்து இங்கு ரோட் பைக்கிங்க் (நீண்ட தூர சைக்கில் சவாரி) ‘மௌன்டெயின் பைக்கிங்’ (சைக்கிளில் மலையேறுதல்) போன்ற பிரத்யேக சாகச பொழுதுபோக்குகளிலும் ஈடுபடலாம்.



Click it and Unblock the Notifications