சோம்வார் பேட்டிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோல்ப் மைதானம் நகரத்தில் இருப்பதிலேயே பழமையான ஒன்றாகும். தனியாருக்கு சொந்தமான இந்த கோல்ப் கிளப் உரிமையாளர்கள் வருகை தரும்போது திறக்கப்படுகிறது.
இதன் அழகுக்காக வேண்டி சினிமா தயாரிப்பாளர்கள் படப்பிடிப்புக்கு இந்த இடத்தை பெரிதும் விரும்புகின்றனர். பீலூர் ஓப்பன் டூர்னமெண்ட் இந்த கோல்ப் மைதானத்தில் அதன் உரிமையாளர்கள் முன்னிலையில் வருடாவருடம் நடத்தப்படுகிறது.