காவிரி ஆற்றின் துணை ஆறான ஹரங்கி ஆற்றின் மீது இந்த ஹரங்கி அணை கட்டப்பட்டுள்ளது. குஷால்நகரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள ஹுட்லூர் எனும் கிராமத்துக்கருகில் இந்த அணை அமைந்துள்ளது.
கூர்க் பகுதியில் சிற்றுலா செல்வதற்கு மிகப்பொருத்தமான இடம் இந்த ஹரங்கி அணை ஆகும். இரவில் இங்கு தங்குவதற்கு பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை உள்ளது. முன் அனுமதி பெற்று இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். தென்மேற்கு பருவ மழை பொழியும் மழைக்காலத்தில் இந்த அணை நிறைந்து காணப்படும்.
மக்கள் நடமாட்டமே இல்லாத முற்றிலும் தனிமையான இடத்தில் அமைந்துள்ள இந்த அணைப் பகுதியிலிருந்து ஒற்றையடிப்பாதைகள் ஆற்றை நோக்கி செல்கின்றன. வெளி உலக தொடர்பே இல்லாத ஒரு மௌன வெளியை தரிசிக்கும் அனுபவத்தை இந்த அணைப்பகுதி சுற்றுலா பயணிக்கு அளிக்கிறது.



Click it and Unblock the Notifications