Search
  • Follow NativePlanet
Share

தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்!

20

கும்பகோணம் அருகே அமைந்திருக்கும் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான ஆன்மீக ஸ்தலம் தாராசுரம் நகரம். தாராசுரமின் சிறப்பே அங்கே வீற்றிருக்கும் ஐராவதம் கோவில் தான். சென்னையிலிருந்து சுமார் 380 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரமின், தொன்மையான பெயர் ராஜராஜபுரம். இவ்வூரில் கிட்ட தட்ட 15000 பேர் வசிக்கின்றனர்.

தாராசுரம் அருகே அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள்

தாராசுரமில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஐராவதம் கோயிலை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தவறவிட்டுவிடக் கூடாது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில், சோழ சாம்ராஜ்ய மன்னர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில், தமிழனின் கோவில் கட்டமைப்பு சிறப்பை எடுத்துரைக்கும் ஒன்றாக விளங்குகிறது.

இக்கோவில் கட்டமைப்பின் பெருமைகளை உணர்ந்த யுனஸ்கோ அமைப்பு, இதனை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து 35 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரம் நகரை எளிதில் சென்றடைய முடியும்.

தஞ்சை பெரிய கோவில் மற்றும் ஐராவதம் கோவில் என இவ்விரண்டையும் சோழர்களே கட்டியிருப்பதால், இவ்விரு கோவில் வடிவமைப்புகளிலும் பல ஒற்றுமைகளை காண முடியும்.

தாராசுரம் நகரின் வானிலை

தாராசுரம் ஒரு வெப்பமண்டலம். ஆதலால், வெயில் அதிக அளவு இருக்கும் ஊர் தாராசுரம். பெரும்பாலும், வருடம் முழுவதும் வெப்பமாகவே இருக்கும் தாராசுரம் நகருக்கு சுற்றுலா வருபவர்கள்  வெயிலுக்கு ஏற்ற காட்டன் போன்ற உடைகளை கொண்டு வருவது சிறந்தது.

தாராசுரம் நகரை அடைவது எப்படி?

கும்பகோணத்திலிருந்து ரயில் அல்லது பேருந்து மூலமாக தாராசுரம் நகரை சென்றடையலாம். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கு  வழக்கமாக செல்லும் ரயில்கள் பயணத்தை எளிமையாக்கும்.

தாராசுரம் சிறப்பு

தாராசுரம் வானிலை

சிறந்த காலநிலை தாராசுரம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தாராசுரம்

  • சாலை வழியாக
    தாராசுரம் நகரை அடைய மிகவும் எளிய மற்றும் சிக்கனமான வழி பேருந்தில் செல்வது. கும்பகோணத்தில் இருந்து 30 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரம் நகருக்கு செல்ல மிகக் குறைந்த கட்டணமே செலுத்த வேண்டி இருக்கும். இது மட்டுமல்லாமல், சேலம், தஞ்சாவூர் போன்ற நகரங்களில் இருந்தும் பேருந்தின் மூலமாக தாராசுரம் நகரை அடைய முடியும். தூரத்தையும், பேருந்து வசதியைப் பொருத்து, பேருந்து கட்டணம் ரூ 200 முதல் ரூ 300 வரை இருக்கலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தாராசுரம் நகரிலேயே ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. அது சிறிய ரயில் நிலையம் தான் என்றாலும், கும்பகோணம், தஞ்சாவூர் இடையே செல்லும் அனைத்து ரயில்களின் மூலமும் தாராசுரம் நகரை அடையலாம். அதுமட்டுமல்லாமல், சென்னை, பெங்களூர், திருச்சி, மதுரை போன்ற புறநகர் செல்லும் ரயில்களும் இவ்வழியே செல்வதால், தாராசுரம் செல்வது மிகவும் சுலபம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    திருச்சிராப்பள்ளி விமானநிலையம் வந்து, அங்கிருந்து கார் மூலமாக சுமார் ஒன்றரை மணிநேரப் பயணத்தில் தாராசுரம் நகரை அடையலாம். மாறாக, சென்னை விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கார் மூலமாக, ஐந்தரை மணி நேரப் பயணத்தில் மூலமும் தாராசுரம் நகரை சென்றடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Apr,Wed
Check Out
02 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu