ஹேண்டிகிராஃப்ட்ஸ் அண்ட் நேச்சுரல் புரோடக்ட்ஸ் எம்போரியம் அல்லது ஆர். எக்ஸ்போ என்று அழைக்கப்படும் இந்த அங்காடி பலவித இயற்கை பொருட்களை விற்பனைக்கு கொண்டுள்ளது.
தரமான மற்றும் அபூர்வமான மூலிகை மற்றும் இயற்கை விளைபொருட்களை பல பகுதிகளிலிருந்தும் தருவிக்கப்பட்டு இந்த அங்காடியில் விற்பனை மற்றும் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. பலவித சொந்த மூலிகைக்கலவைப்பொருட்கள் மற்றும் வாசனைப்பொருள் தயாரிப்புகளிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
குடும்பத்தினரால் மட்டுமே நடத்தப்பட்ட சிறு வியாபார நிறுவனமாக 1932ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த அங்காடியில் ஆரம்ப காலத்தில் வாசனைத்திரவியங்கள் மட்டுமே விற்கப்பட்டன.
பின்னாளில் இந்த நிறுவனம் மேன்மேலும் வளர்ந்து எண்ணெய்கள், வாசைனைப்பொருட்கள், தேயிலை மற்றும் பணப்பயிர்கள், கைவினைப்பொருட்கள், மரச்சாமான்கள், அழகு மற்றும் ஆரோக்கிய பொருட்கள், துணிவகைகள் மற்றும் கைத்தறி நெசவு ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், மற்றும் நவநாகரிக பொருட்கள் போன்றவற்றை அதிக அளவில் விற்பனை செய்யும் மிகப்பெரிய அங்காடி வளாகமாக மாறியுள்ளது.
காலத்துக்கேற்றபடி தற்போது ஆன்லைன் வர்த்தகத்திலும் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பழைய டெல்லியில் உள்ள இந்த அங்காடிக்கு தரமான கலைப்பொருட்கள் மற்றும் வாசனைப்பொருட்களை வாங்க விரும்பும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்கின்றனர். தரத்தை கடைபிடிப்பதற்காகவும், ஒப்பற்ற வாடிக்கையாளர் சேவைக்காகவும் இந்த நிறுவனம் பல விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications