Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » ஈர்க்கும் இடங்கள் » ஹௌஸ் காஸ் வளாகம்

ஹௌஸ் காஸ் வளாகம், டெல்லி

341

தெற்கு டெல்லியில் அமைந்துள்ள இந்த ஹௌஸ் காஸ் வளாகம்  எனும் ஸ்தலம் பல  வரலாற்றுச்சின்னங்கள் வீற்றிருக்கும் வளாகமாக காட்சியளிக்கிறது. இந்த வளாகத்துக்குள் ஒரு சமாதி மண்டபம், இஸ்லாமிய மதராஸா பள்ளி, மசூதி, குளம் ஆகியவற்றோடு பல மாட மண்டபங்களும் காட்சியளிக்கின்றன. நகரமயமாகி விட்ட சூழலுக்கு நடுவே ஒரு புராதன கிராமப்பகுதி தனது தொன்மையான வரலாற்று சின்னங்களுடன் ஜொலிக்கும் காட்சியை இங்கு தரிசிக்கலாம்.

அலாவுதீன் கில்ஜி வம்சத்தால் நிர்மாணிக்கப்பட்ட சிரி நகரத்தின் ஒரு அங்கமாக முற்காலத்தில் இந்த ஹவுஜ் காஸ் திகழ்ந்திருக்கிறது. தற்போது இது மான்கள் பூங்கா மற்றும் சஃப்தர்ஜங் வளர்ச்சிப்பகுதிக்கு அருகிலேயே உள்ளது.

ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ளதால் இது சுவாரசியமான சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஹவுஜ் காஸ் பகுதியில் இந்திய பாரம்பரிய ஆடைகள் மற்றும் கலைப்பொருட்களை விற்கும் கடைகளும் ஏராளமாக உள்ளன.

ஹௌஸ் காஸ் வளாகத்தில் அமைந்துள்ள முக்கிய நினைவுச்சின்னங்கள்:

ஹௌஸ் காஸ் அல்லது ராஜ குளம்: ஹௌஸ் காஸ் எனும் சொல்லுக்கு ராஜ குளம் என்பதே பொருளாகும். அலாவுதீன் கில்ஜி காலத்தில் இந்த குளம் வெட்டப்பட்டிருக்கிறது.

சிரி கோட்டைப்பகுதியில் இருந்த குடியிருப்புகள் மற்றும் குடிமக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் இந்த குளம் உருவாக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. காலப்போக்கில் வற்றிப்போய் பயன்படுத்தப்படாமல் காணப்பட்ட இந்தக்குளம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

குளத்தை சுற்றிலும் அழகிய பூங்கா மற்றும் மரம் செடிகள் உருவாக்கப்பட்டு நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. உலாவுவதற்கும் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும் ஏற்ற இடமாக இக்குளப்பகுதி தற்போது அழகுடன் காட்சியளிக்கிறது.  

 

மதராஸா (இஸ்லாமிய பள்ளி): 1352ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த இஸ்லாமியப்பள்ளி டெல்லி சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் முக்கியமான கல்வி மையாமாக விளங்கியிருக்கிறது. உலகத்திலேயே மிகப்பெரிய மிகச்சிறப்பான மதராஸா என்று அந்நாளில் மதிக்கப்பட்ட பெருமையையும் இது பெற்றிருக்கிறது.  

ஃபெரோஸ் ஷா கல்லறை: துக்ளம் ராஜ வம்சத்தின் மூன்றாவது மன்னரான ஃபெரோஸ் ஷா’வின் கல்லறை இந்த ஹாவுஸ் காஸ் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் ஒரு முக்கியமான வரலாற்றுச்சின்னமாக அமைந்துள்ளது.

இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலை பாணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தனித்தன்மையான கல்லறை அமைப்பு 1352-1354ம் ஆண்டுகளில் கட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த கல்லறை மண்டபத்தில் ஃபெரோஸ் ஷா மன்னர் அவரது மகன் மற்றும் பேரன் ஆகியோரது சமாதிகள் இடம் பெற்றுள்ளன.

மான் பூங்கா: இது புதிதாக சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் பூங்கா அமைப்பாகும். ஹவுஜ் காஸ் வளாகத்தின் வாசல் பகுதியிலேயே குளத்துக்கு அருகில் இது இடம்பெற்றுள்ளது.

அழகாக பராமரிக்கப்பட்டு காணப்படும் இந்த பசுமைப்பூங்காவில் புள்ளி மான், வெள்ளெலிகள், முயல்கள் மற்றும் மயில்கள் போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம்.  

ஹவுஜ் காஸ் வளாகத்தில் ஒவ்வொரு மாலையும் ஹவுஜ் காஸ் ஸ்தல வரலாறு பற்றிய ஒலி ஒளி திரைக்காட்சி விவரணப்படம் பார்வையாளர்களுக்காக காண்பிக்கப்படுகிறது. இந்த புராதன வளாகம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat