டெல்லி மாநகரில் சாணக்யாபுரி டிப்ளமேடிக் என்க்ளேவ் பகுதியில் 80 ஏக்கர் பரப்பளவில் இந்த நேரு பூங்கா அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஞாபகார்த்தமாக இந்த பூங்காவிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டெல்லி நகரத்தின் பசுமைப்பிரதேசங்களில் ஒன்றாக அறியப்படும் இந்த பூங்காவில் காலை மற்றும் மாலை வேளைகளில் ‘மியூசிக் இன் தி பார்க்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
NDMC எனப்படும் புது டெல்லி மாநகர குழுமத்தின் மூலம் இந்த இசை நிகழ்ச்சிகள் மற்றும் இதர கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் ஒரு பக்தித்திருவிழாவும் இந்த பூங்கா வளாகத்தில் கோலாகலமாக நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிகள் தவிர, அன்றாடம் யோகக்கலை வகுப்புகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் இந்த நேரு பூங்காவில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒரு காபி நிலையம் மற்றும் சிவன் கோயில் போன்றவையும் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ளன.
ரஷிய நாட்டின் புகழ்பெற்ற சோசலிச புரட்சி தலைவரான விளாடிமிர் லெனின் அவர்களுக்காக உலோகத்தில் அமைக்கப்பட்ட தத்ரூப சிலையையும் இந்த பூங்காவில் பார்க்கலாம். ரஷியப்புரட்சியின் 70ம் ஆண்டு கொண்டாட்டங்களின் போது 1987ம் ஆண்டு இந்த உருவச்சிலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications