Search
  • Follow NativePlanet
Share

தேவிகுளம் - புத்துணர்வூட்டும் சுற்றுலாத்தலம்!

15

கேரளாவின் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான தேவிகுளம், களகளவென்று ஓசையெழுப்பி குன்றுகளின் உச்சியிலிருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளும், அவற்றை சூழ்ந்து பச்சை கம்பளம் விரித்தது போல காட்சியளிக்கும் பசும்புல் நிலங்களும் புடைசூழ சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்ந்து வருகிறது. இந்த அழகிய நகரம் மூணார் மலை பிரதேசத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தேவிகுளம் மலை பகுதிகளில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்து அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இங்கு ஏராளமான இயற்கை காதலர்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சிவப்பு பசை மரங்கள் நிறைந்த தோட்டங்களின் நடுவே நடைபயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது.

தேவிகுளத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியான சீதா தேவி ஏரியில் பயனிகள் கூட்டத்தை அதிக அளவில் பார்க்கலாம். இந்த ஏரியில் இராமபிரானின் மனைவி சீதாதேவி நீராடியதாக புராணச் செய்தி கூறுகிறது. மேலும் தேவிகுளம் வரும் பயணிகள் பள்ளிவாசல் அருவி, மூணார் மலை பிரதேசத்துக்கும் சென்று வரலாம்.

தேவிகுளம் ஆண்டு முழுவதும் இதமான வெப்பநிலையை கொண்டிருப்பதால் நீங்கள் எந்த பருவ காலங்களிலும் இந்த அழகிய மலை பகுதிக்கு சுற்றுலா வரலாம். எனினும் பனிக் காலத்தில் வெப்பநிலை கணிசமாக குறைந்து காணப்படுவதால் கோடை மற்றும் மழைக் காலங்கள் தேவிகுளம் பகுதியை சுற்றிப் பார்க்க சிறந்த பருவங்களாகும்.

தேவிகுளம் சிறப்பு

தேவிகுளம் வானிலை

சிறந்த காலநிலை தேவிகுளம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தேவிகுளம்

  • சாலை வழியாக
    தேவிகுளம் நகரம் கொச்சி மற்றும் கோட்டயம் நகரங்களுடன் சாலை மூலமாக நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. அதோடு கேரளாவின் மற்ற பகுதிகளிலிருந்து தேவிகுளம் நகருக்கு எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தேவிகுளம் நகரிலிருந்து கொச்சி ரயில் நிலையமும், கோட்டயம் ரயில் நிலையமும் முறையே 150 மற்றும் 136 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்றன. இந்த ரயில் நிலையங்கள் நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையங்களுக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் அல்லது பேருந்துகள் மூலம் சுலபமாக தேவிகுளம் நகரை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    தேவிகுளம் நகரிலிருந்து 111 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து பெங்களூர், சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு ப்ரீபெய்ட் டாக்சிகள் மூலம் சுலபமாக தேவிகுளம் நகரை அடைந்து விட முடியும். இவ்வகை டாக்சிகளில் கிலோமீட்டர் ஒன்றுக்கு 7 முதல் 12 ரூபாய் வரை வசூலிப்பார்கள்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Sat
Return On
26 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Sat
Check Out
26 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Sat
Return On
26 Apr,Sun