ஆன்மீக ஆர்வம் கொண்டவர்களால் வெகுவாக விரும்பப்படும் ஒரு ஸ்தலமாக இந்த பேட் துவாரகா விளங்குகிறது. பல அபூர்வ அழகிய கோயில்கள் இந்த தீவுப்பகுதியில் அமைந்துள்ளன.
பேட் ஷங்கோதார் என்றும் அழைக்கப்படும் இந்த இடம் ஒரு முக்கியமான துறைமுகமாகவும் விளங்கியிருக்கிறது. கடல் சுற்றுலா செல்வதற்கும், டால்பின்கள் போன்றவற்றை பார்த்து ரசிப்பதற்கும் இது பிரசித்தி பெற்றிருக்கிறது.
வல்லபச்சாரியாவால் கட்டப்பட்ட 500 வருடங்கள் பழமை வாய்ந்த கிருஷ்ணர் கோயிலை இங்கு காணலாம். இங்குள்ள ஹனுமான் கோயிலும் ஒரு முக்கிய வழிபாட்டுத்தலமாகும்.
இந்த கோயிலில் ஹனுமானின் மகனாகிய மகரத்வஜாவின் சிலையை பார்க்கலாம். கச்சோரியு எனும் ராமர் கோயில் மற்றும் ஹாஜி கிர்மாணி பீர் எனும் சூஃபி ஞானியின் தர்க்கா மற்றும் ஒரு குருத்வாரா கோயில் ஆகியவை இந்த பேட் துவாரகா தீவில் இதர குறிப்பிடத்தக்க ஆன்மிக அம்சங்களாகும்.



Click it and Unblock the Notifications