நெளபாத் கானா என்பது பழங்கால முகலாய இசைத் திடலாகும். ஷெனாய் மற்றும் மேளங்கள் வாசிப்பதற்காக பிரத்யேகமாக இக்கட்டிடங்கள் கட்டப்பட்டன.இந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் முகலாய கலைகள் மற்றும் கலாச்சாரங்களை எடுத்துரைக்கும் வண்ணம் சுவர் சித்திரங்கள் உள்ளன.
இந்தியாவெங்கும் இப்படி பல கட்டிடங்கள் காணப்பட்டாலும் ஃபதேபூர் சிக்ரியில் உள்ள இக்கட்டிடம் முகலாய அரசு காலத்தில் விழாக்களுக்காக கட்டப்பட்டது.
ஃபதேபூர் சிக்ரியில் உள்ள நெளபாத் கானா அரண்மனையின் நுழைவாயில்லுக்கு அருகில் அமைந்துள்ளது. குறிப்பிட்ட நேரங்களில் ஒருநாளைக்கு ஐந்து முறை இங்கு இசை எழுப்பப்பட்டது.
மூன்றடுக்கு செவ்வகக் கட்டிடமான இதில் யானை வாயில் என்றழைக்கப்பட்ட 'ஹாதி போ' என்ற வாயிலை நகற்றிவிட்டே பயணிகள் உள்ளே செல்ல முடியும். உள்ளரங்கு அழகிய வேலைப்பாடுகளால் நிரப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications