காங்க்டாக் நகரத்தின் மிக முக்கியமான சாலையாக இந்த எம்.ஜி. மார்க் சாலை அமைந்துள்ளது. வருடம் முழுதும் ஏராளமான பயணிகளை இந்த சாலை சந்திக்கிறது. நாட்டிலேயே எச்சில் சிதறல்கள் மற்றும் குப்பைகள் அற்ற சாலை இதுதான் எனும் பெருமையை இது பெற்றிருக்கிறது. இந்த சாலையில் வாகனங்களுக்கு அனுமதியில்லை.
மாலை நேரங்களில் பொழுது போக்குவதற்கும் ஷாப்பிங் செய்வதற்கும் எம்.ஜி. மார்க் மிகவும் ஏற்றதாகும். இந்த சாலையின் இரண்டு புறமும் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இங்குள்ள டைட்டானிக் பார்க் எனும் தேநீர் விடுதியில் சுற்றுலாப்பயணிகள் இசையை ரசித்தபடியே தங்கள் துணையோடு பொழுதை கழிக்கலாம்.
வருடாந்திரமாக நடத்தப்படும் காங்க்டோக் உணவு மற்றும் கலைத்திருவிழா இந்த எம்.ஜி. மார்க் சாலைப்பகுதியில்தான் இடம்பெறுகிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் வகைவகையான சிக்கிம் உணவுப்பண்டங்களை இப்பகுதியில் சுவைத்து மகிழலாம். அச்சமயம் பல்வேறு சிக்கிம் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications