உமாதேவிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த பத்ரகாளி கோயில் கோகர்ணா நகரத்தில் முக்கியமான ஆன்மீக அம்சங்களில் ஒன்றாகும். நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலின் தெய்வம் கோகர்ணா நகரத்தின் காவல் தெய்வமாக கருதப்படுகிறது.
இது மஹாபலேஷ்வரர் கோயில் வளாகத்தில் அதன் அங்கமாகவே அமைந்துள்ளது. சிவனின் மனைவியாகிய உமாதேவியை ராவணன் சொந்தமாக்கிக் கொள்ளக்கூடிய சூழ்நிலை வந்தபோது தேவர்கள் மற்றும் உமாதேவியின் விண்ணப்பத்தின் பேரின் விஷ்ணுக்கடவுள் ஒரு தந்திரம் செய்து உமாதேவியை ராவணனிடமிருந்து மீட்டு இந்த ஸ்தலத்தில் குடிகொள்ள செய்தார் என்று புராணக்கதை கூறுகிறது. இக்கோயிலில் உமாதேவி பத்ரகாளி வடிவத்தில் காட்சியளிக்கின்றார்.



Click it and Unblock the Notifications