பிரசித்தமான குருவாயூரப்பன் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த மாம்மியூர் மஹாதேவா கோயிலின் பெயரிலிருந்தே இது சிவனுக்கான கோயில் என்பது எளிதில் விளங்கும்.
அற்புதமான சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இக்கோயிலில் மஹாவிஷ்ணுவின் பெண் அவதாரமான மோகினி சித்தரிக்கப்பட்டுள்ள ஓவியங்களை காணலாம்.
மாம்மியூர் மஹாதேவா கோயிலுக்கு விஜயம் செய்யாமல் குருவாயூர் பயணம் நிறைவடைவதில்லை என்பதாக ஐதீகம். எனவே குருவாயூரப்பன் கோயிலுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த சிவன் கோயிலுக்கும் விஜயம் செய்கின்றனர்.
முன்பு தான் எழுந்தருளியிருந்த இடத்தை குருவாயூரப்பன் கோயிலுக்கு அளித்துவிட்டு இந்த புதிய இடத்தில் சிவபெருமான் எழுந்தருளியதாக தலபுராணம் கூறுகிறது.
இந்த சிவன் கோயிலின் கருவறையில் பார்வதியின் சிற்பங்களையும் காணலாம். கணபதி, சுப்ரமணியர், அய்யப்பா மற்றும் விஷ்ணு ஆகிய கடவுள்களின் சன்னதிகளும் இந்த மாம்மியூர் மஹாதேவா கோயில் வளாகத்தில் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications