குருவாயூரிலுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களுள் ஒன்று பாலயூர் சர்ச் எனப்படும் இந்த பழமையான தேவாலயம் ஆகும். யேசுவின் ஏழு சீடர்களின் ஒருவரான புனித தோமாவால் கட்டப்பட்ட ஏழு தேவாலயங்களில் இதுவும் ஒன்றாக சொல்லப்படுகிறது.
சிறப்பான கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கும் இந்த தேவாலயத்தில் புனித தோமாவின் வாழ்க்கை வரலாறும் பணிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அப்போஸ்தலர்களின் வெவ்வேறு காலத்திய சமயப்பணிகளை விளக்கும்படியாக 14 பளிங்கு சிற்பங்கள் இந்த தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை தேவாலய வாசற்பகுதியிலேயே காணலாம்.
பாலயூர் மஹாதீர்த்தாடனம் திருவிழாவின்போது ஒரு மரச்சிலுவை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது. இதில் கலந்து கொள்ள நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரள்கின்றனர்.
முப்பிட்டு ஞாயிறு, துக்காரண திருநாள் மற்றும் தர்ப்பண திருநாள் போன்ற இதர முக்கியமான திருநாள்களும் இந்த பாலயூர் தேவாலயத்தில் கொண்டாடப்படுகின்றன. முப்பிட்டு ஞாயிறு திருநாளின்போது இங்கு குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் செய்விக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications