Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குவஹாத்தி » ஈர்க்கும் இடங்கள் » புபனேஸ்வரி கோயில்

புபனேஸ்வரி கோயில், குவஹாத்தி

49

புகழ் பெற்ற காமாக்யா கோயிலிலிருந்து 165 அடி உயரத்தில் நிலாச்சல் மலையில் இந்த புபனேஸ்வரி கோயில் அமைந்திருக்கிறது. இந்து ஐதீக மரபின்படி தேவியின் பத்து மஹாவித்யா அவதாரங்களில் நான்காவது அவதாரமாக இந்த புபனேஸ்வரி ரூபம் கருதப்படுகிறது.

இந்த கோயில் 7 மற்றும் 9ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதன் கட்டிடக்கலை அம்சங்கள் பெரும்பாலும் காமாக்யா கோயிலையே ஒத்திருக்கின்றன. கோயிலை சுற்றிலும் காணப்படும் அமைதியான சூழல் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்கிறது.

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். குறிப்பாக அம்புபச்சி மற்றும் மானஷ பூஜா போன்ற திருவிழாக்காலங்களில் உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்களை இந்த கோயில் ஈர்க்கிறது.

காமாக்யா கோயில் ஸ்தலத்திலிருந்து மலையேற்றம் மூலம் இந்த புபனேஸ்வரி கோயிலுக்கு செல்வதை பல சுற்றுலாப்பயணிகள் விரும்புகின்றனர்.

இந்த மலையேற்றப்பயணத்தின்போது கீழே ஓடும் பிரம்மபுத்திரா நதியின் அழகை நன்கு பார்த்து ரசிக்கலாம் என்பதே இதற்கான காரணம். புபனேஸ்வரி கோயில் ஸ்தலத்திலிருந்து குவஹாட்டி நகரத்தின் அழகையும் பார்த்து ரசிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 May,Sat
Check Out
10 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun