Search
  • Follow NativePlanet
Share

ஹாஜோ - சமய ஒற்றுமைக்கு ஒரு இலக்கணம் !

11

அசாம் மாநிலத்தின் முக்கியமான ஆன்மீக நகரம் ஹாஜோ. இந்து சமயம், பௌத்தம், இஸ்லாம் ஆகிய மூன்று சமயங்களின் கலவையாக திகழ்கிறது ஹாஜோ நகரம். இந்தக் கலவை தான் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.

இங்கு பல்வேறு இந்துக் கடவுளர்களின் கோவில்கள், பௌத்த கோவில்கள் மற்றும் இஸ்லாமியத் துறவிகளின் தர்காக்கள் என பல வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

அசாம் தலைநகர் குவஹாத்திக்கு அருகில் இருப்பதால், ஹாஜோ நகருக்கு எளிதில் செல்ல முடியும். அசாம் மாநிலம், கம்ருப் மாவட்டத்தில், பிரம்மபுத்ரா ஆற்றங்கரையில் அழகிய சிறிய நகரமாக ஹாஜோ காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

ஹாஜோவின் வரலாறு குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. கொச் சாம்ராஜ்யத்தின் தலைநகராக ஹாஜோ திகழ்ந்ததாகவும், பிறகு இந்த நகரம் முகலாயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் கூறுகின்றனர்.

பல நூற்றாண்டுகளாக, பல பெயர்களைத் தாங்கி வந்திருக்கிறது ஹாஜோ. 11 ஆம் நூற்றாண்டில் அபூர்ணபவா மற்றும் மணிகுடா என்றும், 18 ஆம் நூற்றாண்டில் மணிகுட்கிரம் என்றும் ஹாஜோ நகரம் அழைக்கப்பட்டிருக்கிறது. மேலும், புத்தர் இங்கு தான் முக்தி அடைந்தார் என்கின்றனர் பௌத்தர்கள்.

ஹாஜோவை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

ஹயாக்ரிவ மாதவ கோவில், ஹாஜோ நகரின் மிக முக்கியமான திருக்கோவிலாகும். இது ஒரு விஷ்ணு கோவில் ஆகும். ஹாஜோ நகரில் இருக்கும் போவா மெக்கா என்ற மசூதிக்கு இஸ்லாமியர்கள் சென்று மரியாதை செலுத்துகின்றனர்.

மேலும், கணேஷ் கோவில், கேதாரேஷ்வரர் கோவில், காமேஸ்வரி கோவில், தோபார்குரி சத்ரா மற்றும் ஜாய் துர்கா கோவில் என பல கோவில்கள் இங்கு உள்ளன. இவை அனைத்தும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.

ஹாஜோவை அடைவது எப்படி?

அசாம் தலைநகரம் குவஹாத்தியில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது ஹாஜோ. குவஹாத்தியில் இருந்து பல்வேறு பேருந்துகள் ஹாஜோ நகருக்கு இயக்கப்படுகின்றன.

ஹாஜோவின் வானிலை

ஹாஜோவில், கோடைக்காலத்தில் புழுக்கத்துடன் கூடிய கடுமையான வெயில் இருக்கும். குளிர்காலத்தில் வெப்பம் குறைந்து இதமாக இருக்கும். சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள குளிர்காலம் மிகவும் சிறந்ததாக இருக்கும்.

ஹாஜோ சிறப்பு

ஹாஜோ வானிலை

சிறந்த காலநிலை ஹாஜோ

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஹாஜோ

  • சாலை வழியாக
    சாலை வழியாக ஹாஜோ செல்ல இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி, குஹவாத்தி-நல்பாரி சாலை வழியாகச் செல்லலாம். இரண்டாவதாக, குவஹாத்தி - பர்பேடா சாலை வழியாக ஹாஜோவுக்குள் நழையலாம். பள்தான் பஜார், குவஹாத்தி போன்ற இடங்களில் இருந்து பல பேருந்துகள் ஹாஜோ நகருக்கு இயக்கப்படுகின்றன. இங்கிருந்து சுமார் 1 மணி நேரத்தில் ஹாஜோவை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஹாஜோவில் ரயில் நிலையம் இல்லை. ஆனால், குவஹாத்தி ரயில் நிலையம், ஹாஜோ நகருக்கு அருகில் அமைந்திருக்கிறது. குவஹாத்தியில் இருப்பது ஒரு முக்கியமான ரயில் சந்திப்பு. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குவஹாத்தி ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து கார் அல்லது பேருந்து மூலம் ஹாஜோவை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    குவஹாத்தி விமான நிலையம் ஹாஜோ நகருக்கு அருகில் அமைந்துள்ளது. வடகிழக்கு மாவட்டங்களில் இருக்கும் விமான நிலையங்களுள் மிகவும் முக்கியமான விமான நிலையம் குவஹாத்தியில் இருக்கும் லோக்ப்ரியா கோபிநாத் போர்தொலோய் சர்வதேச விமான நிலையம். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பல விமாங்கள் குவஹாத்திக்கு இயக்கப்படுகின்றன. இங்கு வந்து, கார் அல்லது பேருந்து மூலமாக ஹாஜோவை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue