சுற்றுலாப்பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய மற்றொரு அம்சம் ஹேமகுடா மலையடிவாரத்தில் அமைந்துள்ள சசிவேகலு கணேசா கோயிலாகும். இக்கோயிலில் 8 அடி உயரமுள்ள கணேசக்கடவுளின் சிலை உள்ளது. இந்த வினாயகர் சிலை கடுகுகளினால் பூசப்பட்டது போல் தோன்றுவதால் கடுகு கணேசா (சசிவேகலு கணேசா) என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
அதிகம் உணவை உண்டு விட்ட வினாயகர் தன் வயிறு வெடித்துவிடாமல் இருக்க ஒரு பாம்பை எடுத்து தன் வயிற்றில் கட்டிக்கொண்டதாக ஐதீகக் கதைகள் சொல்லப்படுகின்றன. கணேசா சிலையின் வயிற்றில் ஒரு பாம்பை சுற்றியிருப்பது சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த விநாயகர் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. வலது கைகளில் ஒன்றில் உடைந்த தந்தத்தையும் மற்றொன்றில் அங்குசமும் ஏந்தியுள்ளது. இடது கைகளில் ஒன்றில் பாசக்கயிறு ஏந்தியும் மற்றொன்று சிதைந்தும் காணப்படுகிறது.
இந்த சிலையை சுற்றி மிகப்பெரிய பீடம் ஒன்றும் அமைந்துள்ளது. இதில் பொறித்துள்ள கல்வெட்டின் படி இந்த பீடம் 1506ம் ஆண்டும் வணிகர் ஒருவரால் கட்டப்பட்டதாக தெரிகிறது. விஜயநகர மன்னர் இரண்டாம் நரசிம்மரை பெருமைப்படுத்தும் விதமாக அவர் இந்த பீடத்தை கட்டியுள்ளார்.



Click it and Unblock the Notifications