இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்துள்ள ஒரு சிறிய கால்வாய் இந்த கணேஷ் கல்லி ஆகும். இது ஹரிஹரேஷ்வர் நகரத்திலேயே அமைந்துள்ளது. மூன்று அடி அகலமே உள்ள இந்த கால்வாயின் இறுதியில் பயணிகள் ஒரு கணபதிக்கடவுள் சிலையைக் காணலாம்.
ஒரு புனிதமான சுரங்கக்கால்வாய் போன்ற இடத்தில் 30 அடி ஆழத்தில் இந்த கணபதி சிலை அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அலையிறக்க தினங்களில் இந்த சிலையை நன்றாக பார்க்க முடிவதாகவும் நம்பப்படுகிறது.
இயற்கை எழில் நாலாபுறமும் சூழ்ந்திருக்க இதமாய் காற்று வீசும் இந்த பகுதி ஏகாந்தமாய் இயற்கையை ரசித்து மகிழ ஏற்ற இடமாகும்.



Click it and Unblock the Notifications