Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹஸ்தினாபூர் » ஈர்க்கும் இடங்கள் » நிஷியாஜி

நிஷியாஜி, ஹஸ்தினாபூர்

21

ஐதீக குறிப்புகளின்படி ஆதிநாதர் தனது ராஜ்ஜியத்தை துறந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. ஒரு வருடத்திற்கும் மேல் உபவாசம் இருந்து இவர் தவம் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவருக்கு உணவளித்து உபவாசத்தை முடிக்கும் சடங்கு குறித்து எவருக்கும் தெரியாததால் யாரும் இவருக்கு உணவளிக்கவேயில்லை.

இவர் ஹஸ்தினாபூர்  நகரத்தை வந்தடைந்தபோது ஹஸ்தினாபூர் மன்னரின் சகோதரரான ஷ்ரேயஸ் குமார் இவரது உபவாச வாழ்க்கையை பற்றி கேள்விப்பட்டார்.

இவர் தனது முன் ஜன்ம ஞாபகத்திலிருந்து உபவாசத்தை முடிக்கும்  சடங்கை அறிந்துகொண்டு ஆதிநாதருக்கு வைசாக சுக்ல திரிதியை நாளன்று கரும்பு சாறு அளித்து அவரது உபவாசத்தை முடித்து வைத்தார்.

அதுமட்டுமன்றி ஷ்ரேயஸ் குமார் இந்த ‘நோன்பு நிறுத்த சடங்கின்’ ஞாபகார்த்தமாக ஒரு ஸ்தூபி மற்றும் கோயிலையும் எழுப்பியுள்ளார். இது ஆதிநாத் நிஷ்யாஜி அல்லது ‘நோன்பு நிறுத்த கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.

மேலும் அவர் ஆதிநாதரின் பாதச்சுவட்டையும் ஒரு பாறைக்கல்லில் பதிக்கச்செய்துள்ளார். ஹஸ்தினாபூர் நகரத்தில் கங்க் நஹெர் அல்லது கால்வாய் என்று அழைக்கப்படும் இடத்தில் இந்த நிஷ்யாஜி கோயில் உள்ளது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிஷ்யாஜி கோயிலை தரிசிக்க வருகை தருகின்றனர். தஸ் லக்ஷ்மண் பூஜா, அக்ஷ்ய திரித்ய பர்வம், ஹோலி மற்றும் கார்த்திகை பூர்ணிமா திருநாட்களின்போது இங்கு  பல கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில் ஒரு மஹா யக்ஞமும் இங்கு நடத்தப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed