Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹஸ்தினாபூர் » ஈர்க்கும் இடங்கள் » பழைய பாண்டேஷ்வரர் கோயில்

பழைய பாண்டேஷ்வரர் கோயில், ஹஸ்தினாபூர்

21

ஹஸ்தினாபூர் எனும் பெயருக்கு யானைகளின் நகரம் என்பது பொருளாகும். மஹாபாரத காலத்தில் கௌரவர்கள் இதனை தலைநகராக கொண்டு ஆண்டனர்.

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்குமான காவியப்போர் குருஷேத்திரத்தில் நிகழ்ந்தது என்றாலும் அதற்கான வித்து அஸ்தினாபுரத்தில் விதைக்கப்பட்டது என்பது மஹாபாரதத்தை வாசித்த யாவரும் அறிவர். இந்த போரில் பாண்டவர்கள் வென்றபின் அவர்கள் அஸ்தினாபுரத்தை ஆண்டனர்.

பழைய ஹஸ்தினாபுர நகரின் சிதிலமடைந்த பகுதியில் இந்த பழைய பாண்டேஷ்வரர் கோயில் எனும் புராதனமான கோயில் அமைந்துள்ளது. இது ஒரு சிவன் கோயிலாகும்.

புராணிகள் ஐதீகங்களின்படி இங்கு கருவறையில் அமைந்திருக்கும் சிவலிங்கம் பாண்டவர்களின் மூத்த சகோதரனான தன்வீர் கரண் (கர்ணன்) என்பவரால் அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.  இவர் மிகச்சிறந்த வள்ளலாக அக்காலத்தில் புகழ் பெற்றுள்ளார்.

மஹாபாரதத்தின் மிகச்சிறந்த வீரனாக விவரிக்கப்படும் கர்ணன் பல்வேறு சூழ்நிலை நிர்பந்தங்களின் காரணமாக கௌரவர்களின் பக்கமிருந்து பாண்டவர்களை எதிர்த்து போரிட்டார்.

இந்த கோயில் ஒரு சிறிய மலையின் உச்சியில் பெங்காலி இனத்தாரால் எழுப்பப்பட்டிருக்கும் காளி சிலைக்கு கீழே அமைந்திருக்கிறது. இந்த இடத்திலிருந்து ஹஸ்தினாபூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue