ஹோடல் என்ற நகரம் ஹரியானா மாநிலத்திலுள்ள பல்வால் மாநகராட்சியில் உள்ள ஒரு நகராட்சி செயற்குழுவாகும். இது உத்தர பிரதேச எல்லையில் அமைந்துள்ளது. ஹோடல் நகரம் டெல்லியிலிருந்து 88 கி.மீ. தொலைவிலும் ஆக்ராவிலிருந்து 115 கி.மீ. தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை 2-ல் அமைந்துள்ளது.
ஹோடல் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்
ஹோடல் நகரத்தில் சமேலி வான் என்ற புனித இடம் மிகவும் பிரசித்திபெற்றது. அதில் ஹனுமானுக்காக கட்டப்பட்ட ஒரு பழங்கால குரங்கு கோவில் ஒன்றும் உள்ளது.
சுற்று வட்டாரத்தில் உள்ள இடங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் இங்கே வந்த வண்ணம் இருக்கும், முக்கியமாக செவ்வாய்கிழமைகளில். தியாகி பாபா மந்திர் மற்றும் பகிச்சி போன்ற இடங்களும் இங்குள்ள கூடுதல் ஈர்ப்புகளாகும்.
ஹோடலை சுற்றிப்பார்க்க உகந்த நேரம்
இளவேனிற் காலத்தில், அதாவது பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை மற்றும் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை, இங்கு வருவதே சிறந்த நேரமாக கருதப்படுகிறது.
ஹோடலை அடைவது எப்படி?
ஹோடலிலிருந்து டெல்லி மற்றும் குர்கானிற்கு தேசிய நெடுஞ்சாலை 2 வழியாக செல்லலாம்.



Click it and Unblock the Notifications